Sunday, December 13, 2009

தூக்கம் வராத போது அலை கழிக்கும் சிந்தனைகள்

தூக்கம் வரவில்லை. இரவு 2 மணியிலிருந்து கரண்ட் இல்லை. புரண்டு புரண்டு படுத்து, வேறு வழி இல்லாமல், 080-22287118 க்கு போன் செய்து விசாரித்தேன். அதே பல்லவி தான். 'சாரக்கி பவர் ஸ்டேஷன் மிக குறைவாக மின்சாரம் பெறுகிறது; பழுது பார்கிறார்கள்'. எவ்வளவு நாள் இதே கதையை சொல்லுவார்கள்?



உண்மையில் எதிர் காலத்தை நினைத்தால் தூக்கம் வரவில்லை. 



சமீபத்தில் ஏலேக்ட்ரோநிக்ஸ் சிட்டி வரை சென்று வந்தேன். எங்கும் பார்த்தாலும் புது புது அபார்ட்மென்ட் கட்டிடங்கள். கட்டியவன் கோடீஸ்வரன்; வாங்கியவன் கடனாளி. என்ன ஒரு eco system!  எத்தனை பேருக்கு லஞ்சம் காட்டி இருப்பார்கள்! எவ்வளவு விஷயங்களை compromise செய்திருப்பார்கள். அத்தனை பேரும் படித்தவர்கள். ஊழழில் படித்தவன் என்ன, படிக்காதவன் என்ன? பள்ளிகள் எல்லாம் செல்வத்தில் கொழிப்பதன் காரணம், interview ல், பெற்றோர்கள் தேர்வு ஆனது தான். pre-kg க்கு ஒரு லக்ஷம் donation. Moral science போதிக்கும் பள்ளிகளே இப்படி சுரண்டினால், உருப்படுமா இந்த சமுதாயம்?

     

இந்த நகரத்தில் உள்ள அத்தனை வசதிகளும், அத்தனை கட்டிடங்களும் லஞ்சத்தின் ஆளுமையாகவே தோன்றுகின்றன. ஒன்று nichayam - கொடுத்தவர்களும் வாங்கியவர்களும்  நிமதியாக  தூங்க  மாட்டார்கள். நான் இரண்டிலும்  இல்லை , ஆயினும் எனக்கும் தூக்கம் இல்லை. 







இந்த படம் தான் எனது சமீபத்து wallpaper. இந்த சிங்கத்தை போல என் குழந்தைக்காகவாவது விழித்திருக்க தோன்றுகிறது.

No comments:

Post a Comment