Image Courtesy: Wikimedia |
அவள் மட்டும் பளிச்சென்று வர
எங்கள் வீட்டில் எல்லாம்
சிதறி இருக்க
வேலைக்காரி வந்து செய்யட்டும் என்று
போட்டது போட்டபடி கிடக்க
இந்த வீட்டாரை நினைக்கையில்
அவளுக்கு என்ன தோன்றும்?
அவள் உலர்த்தும் பட்டு புடவை
தேய்த்து வைக்கும் வெள்ளி பாத்திரம்
துடைத்து வைக்கும் இரண்டு அடுக்கு
குளிர் சாதனப் பெட்டி
அவள் இது வரை தொடாத
கணிபொறி பெட்டி,
அவளை கவர்ந்து இழுக்காத
மொபைல் கருவிகள்,
அவளுக்கு பிடித்த பாடல் வந்த
தொலைக்காட்சி பெட்டி
எல்லாம் பார்க்கும் போது
அவளுக்கு என்ன தோன்றும்?
அவளுக்கு உடல் சரியில்லா சமயம்
எங்கள் வீட்டுக்கு
நிறைய விருந்தினர் வரும் போதும்
சம்பளம் கொஞ்சம் கூட்டி
கேட்காலம் என்று அவள் நினைகையல்
நாங்கள் பத்து நாள்
விடுப்பில் செல்லும் போதும்
அவளுக்கு என்ன தோன்றும்?
நம் வீட்டு பிள்ளைகள்
உயர் ஆடை உடுத்தி
நுனி ஆங்கிலம் பேசி
நவீன பொம்மைகளுடன் விளையாடியப் பின்
ஆன்ட்டி என்று செல்லமாக அழைத்தால்
அவளுக்கு என்ன தோன்றும்?
No comments:
Post a Comment