Friday, March 5, 2010

ஏமாற்றுபவனும் ஏமாறுபவனும்

சுவாமி நித்யானந்தம் தொடர்பான செய்திகள் என்னை உண்மையில் பாதிக்கவில்லை. செவ்வாய் இரவு இதை சன் டிவியில் பார்த்தாலும், இதை யாரிடமும் விவாதிக்க வேண்டாம் என்று தீர்மானமாக இருந்தேன். ஒரு புறம் இது ஒரு தனி நபரின் அந்தரங்கம். அதை சன் டிவி வியாபாரமாக ஆக்கியது மிகவும் தவறு. இதற்க்கு பல அரசியல் பின்னணி தகவல்கள் இருக்கலாம். எந்தவித சென்சார்ஷிப்  இல்லாமல் தொடர்ந்து ஒளிபரப்பு   செய்தது, நடிகை பெயர் சொல்லாமல் கிசு கிசு போன்ற ஆர்வம் தூண்டியது எல்லாமே விரும்பத்தக்கதல்ல.  மறுபுறம் மக்கள் எது ஆன்மிகம் என்று தெரியாமல் காவியின் பின்னால் கதி என்றும் இருப்பது தவறு. மதம் என்ற எல்லையை தாண்டி வெளி வர வேண்டும். இந்த விஷயத்தில் யார் குற்றவாளி என்றாலும் ஏமாறுபவன் நீயும் நானும் தான். 

No comments:

Post a Comment