Wednesday, December 29, 2010

டாக்டர் கலாம் - புத்தகம் படிக்கும் பழக்கம் பற்றி

புத்தகம் படிக்கும் பழக்கம் பற்றி டாக்டர் கலாம் அவர்கள்  "விழிவேள்வி"  புத்தக முன்னுரையில் சொல்லியிருப்பதாவது:



"...மாணவர்களை நான் ஏற்க வாய்த்த உறுதி மொழி எனக்கு நினவு வருகிறது 


1. என்னுடைய வீட்டில் பூஜை அறை அல்லது பிரார்த்தனை செய்யும் இடத்துக்கு அருகில், 20 நல்ல புத்தகங்களுடன் ஒரு சிறு வீட்டு நூலகத்தை ஆரம்பிபேன்.



2. என்னுடிய வளர்ந்த மகன் மற்றும் மகள் 2௦ புத்தக நூலகத்தை, 2௦௦ புத்தக நூலகமாக மாற்ற எடுக்கும் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பேன்.



3. என்னுடைய வளர்ந்த பேரன் மற்றும் பேத்திகள் 2௦௦ புத்தக நூலகத்தை, 2௦௦௦ புத்தக நூலகமாக மாற்ற எங்கள் குடும்பம் உறுதுணையாக இருக்கும்.



4. தினமும் ஒரு மணி நேரம், நானும் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், எங்கள் வீட்டு நூலகத்தைப பயன்படுத்திப் படிக்கும் பழக்கத்தை இன்று முதல் தொடர்ந்து செயல்ப்படுத்துவோம். 



5.எங்கள் வீட்டு நூலகம் தான் எங்கள் வீட்டுப் பரம்பரைச் சொத்து; எங்கள் வீட்டு அறிவுக் களஞ்சியம்.



6. இந்த முயற்சிதான் நாட்டில் ஏற்படப்போகும் அறிவ்வு புரடிசிக்கு அடிப்படி ஆதாரம்."
எத்தனை வளமான சிந்தனை இவை!

No comments:

Post a Comment