மன்மதன் அம்பு |
மதன் - மதன கோபால் (மாதவன்)
அம்பு - அம்புசாக்ஷி (த்ரிஷா)
இந்த மூன்றும் சேர்ந்து மன்மதன் அம்பு ஆனது. த்ரிஷா மாதவன் காதலர்கள். அவர்கள் இடையே ஊடல். மாதவன் கமலை உளவானாக நியமித்து த்ரிஷாவை கண்காணிக்க செய்கிறார். முதல் பாதியிலையே படம் முடிந்து விடுகிறது. காமெடி என்ற பெயரில் அறுவை.
நிறை என்று சொன்னால் -
* த்ரிஷாவின் யதார்த்தமான நடிப்பு
* ஐரோப்பா சுற்றுபயணம்
* நீலவானம் பாடல்
* சின்ன சின்ன சுவாரசியங்கள்
குறை என்று சொன்னால் -
* கதை என்று ஒன்று இல்லை
* லாஜிக் இல்லை என்றாலும் பரவாயில்லை. ஒரே நாடகத் தனம்.
* மன்னார், குருப் என்று ஒட்டாத பெயர்கள்
* கழுத்தில் ரத்தம் வராத குறை தான்.
வழக்கம் போல கே எஸ் ரவிக்குமார், ஒரு காட்சியில் தலை காட்டி விடுகிறார். தேவி பிரசாத் தனது பாடலில் பெயரை அறிவித்து கொள்கிறார். கமல் தனக்கு தெரிந்த எல்லாவற்றையும் ஒரே படத்தில் சொல்ல துடிக்கிறார். விஜய் டிவியில் வந்த பேட்டிகள் அத்தனை ஈர்ப்பாக இருந்தன. த்ரிஷா, மாதவன் - திறமையுள்ள நடிகர்கள். வீணடித்து விட்டார்கள். சங்கீதா, குருப் கதாபாத்திரங்கள் ஒரு மாதிரி எரிச்சல் உண்டு பண்ணுகின்றன. த்ரிஷா கவிதை படித்து இருக்க வேண்டாம். படம் நெடுக தண்ணி, பாத்ரூம் என்று நகைச்சுவை (!) அம்சங்கள். எந்த அடிப்படையில் ஆனந்த விகடன் 40 மதிப்பெண் கொடுத்ததென்று தெரியவில்லை. நான் 30 மதிப்பெண் கொடுப்பேன்.
இந்த மாதிரி படம் எடுத்தால் அப்புறம் எப்படி திரை அரங்குக்கு வந்து பார்க்க சொல்கிறார்கள்?
படம் முடித்து விட்டு INOX வளாகத்தில் உள்ள "மயிலை மசாலா"-வில் மதிய உணவு முடித்தோம்.
மயிலை மசாலா-வில் காரம் அதிகம்
மன்மதன் அம்புவில் சாரம் குறைவு
||மயிலை மசாலா-வில் காரம் அதிகம்
ReplyDeleteமன்மதன் அம்புவில் சாரம் குறைவு||
அடடா...
பன்ச் டயலாக்!!!