Monday, September 6, 2010

Sept 6: உலக கதிர் தினம்

உலக கதிர் தினம்

என் அன்பு தம்பி கதிர்க்கு,

பிறந்த நாள் வாழ்த்துகள்.

ஏதோ ஒரு மூலையில் பிறந்து, எங்கோ வளர்ந்து, அழகாய் ஒரு இடத்தில வந்து சந்தித்த பொழது கூட தெரியாது, நாம் இப்படி ஒன்றி போவோம் என்று.

சில சமயம் நினைத்துக் கொள்வேன் - உன்னுடைய வாழ்க்கை ஒரு ஹீரோவின் வாழ்க்கை என்று. எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் எழும்பும் பெரிய சமுத்திர அலையை சந்திக்கும் தீரன் போல புகுந்து வெளி வருகிறாய். உன்னுடைய எளிமை, உன்னுடைய யதார்த்தம், உன்னுடைய timing, உன்னுடைய sense of humour, - எல்லாவற்றுக்கும் நான் எப்பவும் fan (தமிழில் டைப் செய்தால் பேன் என்று வருகிறது).

நீ உன் வாழ்கையை full size க்கு வாழ்கிறாய்  என்று நான் சொல்லுவேன்.

பெரும்பாலும் உன் சொந்த முடிவுகளை நீ எடுப்பாய் என்றாலும், ஒரு அண்ணனாக என்னை மதித்து கலந்தாலோசிப்பது என்னக்கு பெருமை.  நீயும் கிர்த்தியும் வாழ்வில் மிகவும் சிறப்பாக வருவீர்கள்.

உன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு Sept 6 தினத்தை உலக கதிர் தினமாக அறிவிக்கிறேன்.



அன்பு அண்ணா,

கணேஷ்

1 comment:

  1. Ennarumai nanba, anna and etc., Thanks a lot. I liked this so much. This birthday is something special for me. Here US has declared holiday for my birthday.

    ReplyDelete