Showing posts with label Poems. Show all posts
Showing posts with label Poems. Show all posts

Sunday, September 30, 2012

She is still around

She is still around.
I try to avoid...
Not sure how I can eliminate beggary...
Undecided if I have to support her !
She keeps appearing on the signals...
Reminding us in contrast of ATMs and Fashions around !
What do I explain to my kid?


Sunday, December 26, 2010

ஆ ராசாவும், வெங்காயமும்

 ஆ.ராசாவும், வெங்காயமும்



பார்க்க சாமானியன்  போலிருக்கும்

தோல் உரிக்க உரிக்க கண்ணீர் வரும்



பேராசை வெள்ளத்தில் ஒன்று 

பெரும் மழை வெள்ளத்தில் ஒன்று 



அலை வரிசையில் சிக்கியதொன்று

விலை வரிசையின் உச்சத்திலொன்று





பதவியிலிருந்து இறங்கியதொன்று - சிலர்

உதவியால் விலை குறைந்ததொன்று





இரண்டும் நாட்டின் விவகாரம்

இரண்டில் ஒன்றில் உண்டு ஈரம் 



பையன் ராசா மாதிரி இருக்கான்னு - இனி

கொஞ்சவா முடியும்?

இது வெறும் வெங்காயமென்று

சொல்லவா முடியும்?



பாமரனுக்கு என்ன தெரியும்?

பாவம் அவனுக்கு மறதி அதிகம்.

தேர்தல் வரும் வேளை

வெளுத்து எல்லாம் பாலாகும்.



 written by Ganesh Subramanian

Sunday, May 16, 2010

கோடை மழை

அனலில்

அலைபவர்கள்

அயராமல் இருக்க

அன்றாடம்

அசரீரி இடியுடன்

அடை மழை

அளிப்பாள்

அருள் அன்னை

Sunday, April 25, 2010

விண்ணிலிருந்து மண்ணுக்கு

காலை வெயில் வரும் முன்னே

கதிரவனின் இளங் கீற்றை

எட்டு நிமிடங்கள் பற்றிக் கொண்டே -உன்

வீட்டு வாசல் வர ஆசை



விண்ணில் தோன்றும் 

மின்னல் கீற்றின்

வெள்ளி நிற வாலைப் பற்றி

உன் சன்னல் நோக்கி

பயணம் செய்ய ஆசை



மழைப் பொழியும்

மேகம் முதுகில்

மழை துளியை குடையாய் பற்றி

உன் முற்றம் நோக்கி

பயணம் செய்ய ஆசை



பாசம் எல்லாம் ஒன்றும் இல்லை

வீடு பூட்டியே இருக்கிறது

வாங்கிய பணத்தை

எப்பொழுதடா தருவாய்?

அம்மா வளர்க்கும் பூஞ்செடி

அம்மா வளர்க்கும் பூஞ்செடி 

 அதிகமாய் சில மொட்டுக்கள்

விடும் பொழுது

இயற்கை தன்னை

தேர்வு செய்ததுப் போல்

பூரிப்படைவாள்   அம்மா

Sunday, April 4, 2010

Tamil Poem: வேலைக்காரிக்கு என்ன தோன்றும்?




Image Courtesy: Wikimedia
வேலைக்காரிக்கு என்ன தோன்றும்?



வள் மட்டும் பளிச்சென்று வர

எங்கள் வீட்டில் எல்லாம்

சிதறி இருக்க

வேலைக்காரி வந்து செய்யட்டும் என்று

போட்டது போட்டபடி கிடக்க

இந்த வீட்டாரை நினைக்கையில்

அவளுக்கு என்ன தோன்றும்?



வள் உலர்த்தும் பட்டு புடவை

தேய்த்து வைக்கும் வெள்ளி பாத்திரம்

துடைத்து வைக்கும் இரண்டு அடுக்கு

குளிர் சாதனப் பெட்டி

அவள் இது வரை தொடாத

கணிபொறி பெட்டி,

அவளை கவர்ந்து இழுக்காத

மொபைல் கருவிகள்,

அவளுக்கு பிடித்த பாடல் வந்த

தொலைக்காட்சி பெட்டி

எல்லாம் பார்க்கும் போது

அவளுக்கு என்ன தோன்றும்?



வளுக்கு உடல் சரியில்லா சமயம்

எங்கள் வீட்டுக்கு

நிறைய விருந்தினர் வரும் போதும்

சம்பளம் கொஞ்சம் கூட்டி

கேட்காலம் என்று அவள் நினைகையல்

நாங்கள் பத்து நாள்

விடுப்பில் செல்லும் போதும்

அவளுக்கு என்ன தோன்றும்?



ம் வீட்டு பிள்ளைகள்

உயர் ஆடை உடுத்தி

நுனி ஆங்கிலம் பேசி

நவீன பொம்மைகளுடன் விளையாடியப்  பின்

ஆன்ட்டி  என்று  செல்லமாக அழைத்தால் 

அவளுக்கு என்ன தோன்றும்?

Saturday, April 3, 2010

Tamil Poem: நீ அழைப்பாய் என

நீ அழைப்பாய் என

நான் இருந்தேன்.

உன் அழைப்பிற்கு  

காத்திருக்கும் கணங்கள்

இதயக்  கூட்டின் வெற்றிடத்தில்

எதையோ நிரப்பிகிறது.

அர்த்தம் இல்லாமல்

கோபம்  வருகிறது.

ஒரு வேளை நீ அழைத்தால்

இயல்பாய் பேசும் படி

மனசு சொல்கிறது

Friday, November 7, 2008

ஒபாமாவின் வெற்றி



வேலைக்கு போனோமா

வீட்டுக்கு வந்தோமா

என்று இருந்தோமா;

அமெரிக்கா தேர்தல் முடிவு

நமக்கு வரமா ஒபாமா

பொறுத்திருந்து பார்ப்போமா?



I wrote this witty poem to reflect the moods of Indians on Obama's thoughts on outsourcing to India. Scripted while bathing.